Wednesday, August 23, 2023

வரலாற்றில் இன்று...

ஆகஸ்ட்.23: இன்று எழுத்தாளர் வ.ராமசாமி நினைவு தினம்! 👉தமிழ் எழுத்தாளர், இதழியலாளர் வ.ராமசாமி 1889-ம் ஆண்டு தஞ்சாவூரின் திருப்பழனத்தில் பிறந்தார். 👉அறிஞர் அண்ணா தனது திராவிடநாடு பத்திரிகையில் வ.ராவை "அக்கிரகாரத்து அதிசய மனிதர்" என்று வர்ணித்தார். 👉தீண்டாமை ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம், கைம்பெண் திருமணம், பெண்கல்வி போன்ற கருத்துகளைப் புதினங்களாக எழுதினார். 👉1914-ல்தஞ்சையிலிருந்து வெளிவந்த சுதந்திரன் பத்திரிகை ஆசிரியரானார். 👉பிறகு பிரபஞ்சமித்திரன், தமிழ்நாடு உள்ளிட்ட பல பத்திரிகைகளில் பணியாற்றினார். 👉இவர் வாழ்க்கையில் பெரிய திருப்பம் என்பது மணிக்கொடி பத்திரிகையில் ஆசிரியராக இருந்தது. 👉கல்கி, புதுமைப்பித்தன் போன்ற இளம் எழுத்தாளர்களை இப்பத்திரிக்கை மூலம் ஊக்குவித்தார். 👉1930-ம்ஆண்டு வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டதற்காக 6 மாதம் அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். 👉சிறையில் இருந்து கொண்டே, ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கட்டுரைகள் எழுதினார். 👉அவை தொகுக்கப்பட்டு பின்னாளில் "ஜெயில் டயரி" என்ற பெயரில் நூலாக வெளி வந்தது. 👉சிறந்த எழுத்தாளரான இவர் 1951 ஆகஸ்ட் 23-ம் தேதி காலமானார்.

No comments:

Post a Comment