Monday, August 28, 2023
வரலாற்றில் இன்று ராபர்ட் கால்டுவெல் நினைவு தினம்...
ஆகஸ்ட்.28:
இன்று ராபர்ட் கால்டுவெல் நினைவு தினம்!
👉ஒப்பியல் மொழி ஆய்வில் ஆர்வம் கொண்ட ராபர்ட் கால்டுவெல் 1814-ம் ஆண்டு அயர்லாந்தில் பிறந்தார்.
👉கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பயின்றார்.
👉24 வயதாக இருந்தபோது லண்டன் மிஷ்னரி சொசைட்டி என்னும் கிறிஸ்தவ மதக் குழுவினருடன் சேர்ந்து 1838 ஜனவரி 8-ம் தேதி சென்னைக்கு வந்தார்.
👉விவிலியத்தை வட்டார மொழியில் கற்பிப்பதற்காகத் தமிழைக் கற்றார்.
👉தமிழ்மொழியில் 1841-ல் பட்டம் பெற்றார்.
👉திருநெல்வேலி இடையன்குடியில் 50 ஆண்டுகள் தங்கி மதப்பணியுடன் சேர்த்து தமிழ்ப்பணியும் செய்தார்.
👉1856-ல் ’திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்னும் புத்தகத்தை எழுதினார்.
👉தமிழ்மொழி உலகின் முதல் மொழி என்றும் மலையாளம், தெலுங்கு, கன்னடம் எல்லாம் தமிழிலிருந்து பிறந்த மொழிகள் என்று கண்டுபிடித்தார்.
👉தமிழ்மொழிக் குடும்பம் இருப்பதற்கான சான்றுகளை ஒருங்கிணைத்து உறுதிப்படுத்தினார்.
👉அகழ்வாய்வுகளில் ஈடுபட்டுப் பல பண்டைய கட்டிடங்களின் அடிப்படைகளையும், ஈமத் தாழிகள், நாணயங்கள் முதலானவற்றையும் வெளிக் கொண்டு வந்த ராபர்ட் கால்டுவெல் 1891 ஆகஸ்ட் 28-ம் தேதி காலமானார்.
Subscribe to:
Post Comments (Atom)
-
60 DAYS STUDY PLAN FOR TNPSC GROUP 2 & 2A EXAM DAY - 1 பேரண்டத்தின் இயல்பு பொது அறிவியல் விதிகள் TEST -1 ஐ எழுதி பயிற்சி செய்ய CL...
-
TNUSRB & PC 2024 தேர்விற்க்கான மாதிரித் தேர்வு எழுத CLICK HERE (எட்டாம் வகுப்பு தமிழ் முழுவதும்)

No comments:
Post a Comment